நடிகை நமீதாவுக்கு கடந்த நவம்பர் 24-ம் தேதி வீரேந்திர சௌத்ரி என்பவருடன் திருப்பதியில் திருமணம் நடைபெற்றது.
'மச்சான்ஸ்...' எனக் கொஞ்சிக் கொஞ்சிப் பேசி தமிழ் ரசிகர்களின் அபிமானத்தைப் பெற்ற நடிகை நமீதாவுக்கு கடந்த சில வருடங்களாக சினிமாவில் சரியான வாய்ப்புகள் இல்லை.
கவர்ச்சி நடிகையாக அறிமுகமாகி தமிழில் 'எங்கள் அண்ணா', 'ஏய்', 'பில்லா', 'அழகிய தமிழ்மகன்' உள்ளிட்ட பல தமிழ்ப் படங்களில் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார் நமீதா. நடிகை நமீதா தனக்கும் வீரேந்திர சௌத்ரி என்பவருக்கும் திருமணம் நடக்க இருப்பதாக ஒரு வீடியோ மூலம் அறிவித்திருந்தார். பிறகு இவர்களது திருமணப் பத்திரிக்கை சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவியது. அவர் அறிவித்தபடி, திருப்பதியில் உள்ள தனியார் ஹோட்டல் ஒன்றில் நவம்பர் 22-ம் தேதி மாலை வரவேற்பு நிகழ்ச்சியும், நவம்பர் 24-ம் தேதி வெள்ளிக்கிழமை காலை இஸ்கான் கோவிலில் திருமணமும் நடைபெற்றது. குஜராத்தைச் சேர்ந்த நமீதாவின் குடும்ப சம்பிரதாயப்படி திருமணத்துக்கு முன்பு மெஹந்தி உள்ளிட்ட சடங்குகள் நடத்தப்பட்டன. அதன்படி நமீதா மெஹந்தி போட்டுக்கொண்டார். திருமணத்தில் நமீதா மற்றும் வீர் ஆகியோரின் குடும்ப நண்பர்களும், உறவினர்களும் கலந்துகொண்டனர். பிக்பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளர்களான ஆர்த்தி, காயத்ரி, சக்தி உள்ளிட்டோரும் நமீதாவின் திருமணத்தில் கலந்துகொண்டனர். 'ஏய்' படத்தில் நமீதாவோடு இணைந்து நடித்த சரத்குமார் தனது மனைவி ராதிகாவோடு திருமணத்தில் கலந்துகொண்டார். இந்நிலையில், ஷார்ட் அண்ட் ஸ்வீட்டான தங்களது திருமண வீடியோவை நமீதா யூ-ட்யூபில் பதிவேற்றி இருக்கிறார்.
Actress Namitha was married to Virender Choudhary on November 24 in Tirupati. Namitha and Veer's family friends and relatives were also present at the wedding. Sarath Kumar, Radhika, Aarthi, Gayatri and Shakti vaasu also participated in Namitha's wedding. In this scenario, Namitha has uploaded their wedding video on You-Tube.