கஜினிகாந்த்: அடல்ட் காமெடி படத்திற்கு ரஜினி கெட்டப்பா, என்ன கொடுமை சார் இது?..வீடியோ

Filmibeat Tamil 2017-12-12

Views 10.6K

சந்தோஷ் பி ஜெயக்குமார் இயக்கத்தில் ஆர்யா நடிக்கும் கஜினிகாந்த் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. ஹரஹர மகாதேவகி எனும் அடல்ட் காமெடி படம் மூலம் வெற்றி கண்ட சந்தோஷ் பி ஜெயக்குமார் கவுதம் கார்த்திக்கை வைத்து இருட்டு அறையில் முரட்டுக் குத்து படத்தை எடுக்கிறார். மேலும் ஆர்யாவை வைத்து கஜினிகாந்த் படத்தையும் இயக்குகிறார் சந்தோஷ்.
நேற்று ஆர்யாவின் பிறந்தநாள், இன்று ரஜினிகாந்தின் பிறந்தநாள். இந்த இரண்டு நாட்களையும்யொட்டி கஜினிகாந்த் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளனர். போஸ்டரை சூர்யா வெளியிட்டுள்ளார்.
கஜினிகாந்த் போஸ்டரில் ஆர்யா வேட்டியில்லாமல் சட்டை, துண்டுடன், ஒரு கையில் பாரதியார் புத்தகம், மறுகையில் டிபன் கேரியர் என்று தர்மத்தின் தலைவன் பட ரஜினியை நினைவூட்டுகிறார்.
கஜினிகாந்த் அடல்ட் காமெடி படம் என்று அறிவிக்கப்பட்டது. அந்த படத்தில் ஆர்யாவுக்கு எதற்காக ரஜினி கெட்டப் போட்டுள்ளனர் என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
கோலிவுட்டில் வேகமாக வளர்ந்து வரும் சயீஷா சைகல் தான் கஜினிகாந்த் ஹீரோயின். ஹரஹர மகாதேவகி, இருட்டு அறையில் முரட்டுக் குத்து படங்களை தொடர்ந்து கஜினிகாந்தையும் ஞானவேல்ராஜா தான் தயாரிக்கிறார்.


Actor Suriya has released the first look of Arya's upcoming movie Ghajinikanth. Arya's get up in Ghajinikanth reminds us of Rajinikanth's character in Dharmathin Thalaivan.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS