விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவனை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என பாஜக தேசிய செயலாளர் எச். ராஜா வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக புதுச்சேரியில் செய்தியாளர்களிடம் இன்று எச். ராஜா கூறியதாவது:
ஓகி புயல் தொடர்பாக தமிழக அரசுக்கு மத்திய அரசு முன்கூட்டியே தகவல் அளித்தது. ஆனால் தமிழக அரசுதான் சரியாக கையாளவில்லை.ஓகி புயல் பாதித்த போது மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் முகாமிட்டு நிவாரணப் பணிகளை மேற்கொண்டார். மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனும் கன்னியாகுமரி வந்து பார்வையிட்டார்.
கன்னியாகுமரியில் இதுவரை மொத்தம் 2,426 மீனவர்கள் மீட்கப்பட்டுள்ளனர். மீனவர்கள் நடத்தும் போராட்டத்தில் பிரதமர் மோடி, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அஞ்சலி செலுத்தும் போஸ்டர்களை வைப்பது அநாகரிகமானது.
BJP National Secretary H Raja has demanded that the police should be arrest VCK leader Thol. Thirumavalavan under Goondas Act.