கௌதம் மேனன் தயாரிப்பு... 'மெட்ராஸ் சென்ட்ரல்' சுதாகரின் 'அருமையான படம்'- வீடியோ

Filmibeat Tamil 2017-12-11

Views 2.1K

யூ-ட்யூபில் 'மெட்ராஸ் சென்ட்ரல்' சேனல் பயங்கர பிரபலம். அரசியல்வாதிகளை செமையாக கலாய்த்து வெளியாகும் 'பரிதாபங்கள் சீரிஸ்' ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்றது. 'மெட்ராஸ் சென்ட்ரல்' சேனலின் கோபி, சுதாகர் கூட்டணி கலக்கல் காமெடிகளுக்குப் பெயர் போனவர்கள். இவர்கள் இணைந்து சமீபத்தில் 'ஹாஃப் பாயில்' எனும் வெப் சீரிஸ் ஒன்றில் நடித்திருந்தனர்.
இந்நிலையில், சுதாகர் வேறொரு வெப் சீரிஸில் நடித்திருக்கிறார். 'வீக்கெண்ட் மச்சான்' என டைட்டில் வைக்கப்பட்டிருக்கும் இந்த வெப் சீரிஸை கௌதம் மேனனின் ஒன்றாக என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்து வெளியிடுகிறது. கௌதம் மேனன் சமீபமாக ஷார்ட் பிலிம்ஸை தயாரித்து வெளியிட்டு வருகிறார்.
'வீக்கெண்ட் மச்சான்' வெப் சீரிஸின் முதல் எபிஸோடான 'அருமையான படம்' வெள்ளிக்கிழமை ரிலீஸானது. இந்த வெப் சீரிஸின் மூலம் சுதாகர் கௌதம் மேனன் தயாரிப்பில் நடித்துள்ளார். 'அருமையான படம்' எபிஸோட், படங்களை விமர்சனம் செய்யும் இன்ஸ்டன்ட் விமர்சகர்களை கலாய்த்து உருவாகி இருக்கிறது. விமர்சகர்களின் அட்ராசிட்டிகளை பார்த்து கடுப்பானவர்களா நீங்கள்? இந்த எபிஸோடை பார்த்து உங்கள் கருத்துகளை இங்கே பதிவு செய்யலாம்.


'Madras Central' you-tube Channel's Gobi and Sudhakar are familiar for comedy programs. They have recently starred in the 'Half Boil' web series. In this case, Sudhakar has acted in another web series. Gautham Menon is producing and releasing the web series, titled 'Weekend Machan'.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS