ஆர்.கே.நகர் இடைத்தேர்தலை தேர்தல் ஆணையம் முறையாக நடத்த வேண்டும் என திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். ஓபிஎஸ், ஈபிஎஸ் என்னதான் குட்டிக்கரணம் போட்டாலும் அதிமுக ஜெயிக்க முடியாது என்றும் அவர் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின், ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் ஏற்கனவே நிறுத்தி வைக்கப்பட்டது. அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடந்து 89 கோடி ரூபாய் மீட்கப்பட்டது. தற்போதைய இடைத் தேர்தலில் அது போன்று முறைகேடுகள் நடக்க கூடாது என தேர்தல் ஆணையரிடம் கேட்டுக் கொண்டு இருக்கிறோம்.
அதிமுக செயல் வீரர்கள் கூட்டத்தில் பேசிய ஓ.பி.எஸ்., - இ.பி.எஸ், 'இரண்டு தரப்பினரும் ஒன்று சேர வேண்டும் என முன்பு தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டது என தெரிவித்து இருந்தனர். எனவே, அரசுக்கு சார்பாக தேர்தல்ஆணையம் செயல்படுகிறதா என்ற சந்தேகம் எழுகிறது. மத்திய அரசு இவர்கள் சொல்வதை கேட்கின்றனரோ என்ற சந்தேகம் எழுகிறது
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலை தேர்தல் ஆணையம் முறையாக நடத்த வேண்டும். மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். பணப்பட்டுவாடா புகாரால் ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் ஏற்கனவே ரத்து செய்யப்பட்டது என அவர் கூறியுள்ளார்.
DMK working president MK Stalin has said that Team OPS and EPS cannot win in RK Nagar by election. ADMK to loss deposit he added.