"வாட் எ சேஞ்ச் ஓவர் லட்சுமி மேனன்...?" - வாயைப் பிளக்கும் ரசிகர்கள்!- வீடியோ

Filmibeat Tamil 2017-12-11

Views 47

சசிகுமார் நடித்த 'சுந்தரபாண்டியன்', விக்ரம் பிரபுவின் 'கும்கி' ஆகிய படங்களின் மூலம் தமிழில் அறிமுகமான லட்சுமி மேனன் தமிழ் சினிமாவில் பல படங்களில் நடித்து வந்தார்.
இவர் நடித்த பல படங்கள் ஹிட் வரிசையில் இடம் பிடித்தன. ஆனால், இவரின் உடல் எடை அதிகரித்ததால் பட வாய்ப்பு பாதியாகக் குறைந்தது.
மேலும், தன் பள்ளி படிப்பை முடித்து கல்லூரி படிப்பில் கவனம் செலுத்தி வந்தார். ஆனால், தற்போது லட்சுமி மேனன் உடல் எடையைக் குறைத்து ஆளே மாறியிருக்கிறார்.
மலையாளத்தில் 'ரகுவிண்டே ஸ்வந்தம் ரசியா' என்ற படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார் லட்சுமி மேனன். தமிழில் நடிக்கத் தொடங்கி, பல படங்கள் ஹிட் அடித்ததால் ராசியான நடிகை எனப் பெயர் பெற்றார்.
தொடர்ந்து நடித்து வந்த லட்சுமி மேனனின் உடல் எடை அதிகரித்ததால் வாய்ப்புகள் குறைந்தன. கடைசியாக தமிழில் விஜய் சேதுபதி ஜோடியாக 'றெக்க' படம் அவர் நடித்து வெளிவந்தது.
லட்சுமி மேனன், தமிழ் சினிமாவில் பாடகியாகவும் தூள் கிளப்பி இருக்கிறார். 'ஒரு ஊர்ல ரெண்டு ராஜா', 'சாகசம், 'குழம்பி' ஆகிய படங்களில் இடம்பெற்ற பாடல்களைப் பாடியிருக்கிறார் லட்சுமி மேனன். உடல் எடை குறைத்து சமீபத்தில் லட்சுமி மேனன் வெளியிட்ட புகைப்படம் ஒன்று ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியுள்ளது. மேலும். சமூக வலைத்தளங்களில் இந்தப் புகைப்படம் வைரலாகியுள்ளது.


Lakshmi Menon, who had acted in Tamil cinema. Many of his films starred in the hit line. But her body weight was increased, and the chances for the film cut in half. In addition, he completed his schooling and concentrated on college studies. But now Lakshmi Menon has reduced the body weight.

Share This Video


Download

  
Report form