தமிழகத்தில் கிராம நிர்வாக அலுவலர் முதல் முதல்வர் வரை அனைத்திலும் ஊழல் திளைத்திருப்பதாக பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் குற்றம்சாட்டியுள்ளார். ஊழல் குற்றச்சாட்டுகளுக்கான ஆதாரத்தை ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்திடம் அன்புமணி இன்று நேரில் வழங்கினார்.
இதற்குப் பின்னர் ராஜ்பவன் வாசலில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது. : தமிழக ஊழல்கள் குறித்து ஆளுநரிடம் புகார் மனு அளித்துள்ளேன், அதனை வரிக்கு வரி படிப்பேன் என்று ஆளுநர் கூறி இருக்கிறார். அதில் உண்மை இருந்தால் நடவடிக்கை எடுப்பேன் என்று ஆளுநர் உறுதியளித்திருக்கிறார். இதே போன்ற அறிக்கையை முன்னாள் ஆளுநர் ரோசய்யாவிடம் கொடுத்தோம், அவர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
அப்போதே ஆளுநர் ரோசய்யா நடவடிக்கை எடுத்திருந்தால் தமிழகம் இன்று இந்த மோசமான நிலைக்கு சென்றிருக்காது. இது தொடர்பாக நீதிமன்றத்திலும் வழக்கு தொடர்ந்துள்ளோம்.
தமிழகத்தில் அனைத்து துறைகளிலும் ஊழல் இருக்கிறது. கிராம நிர்வாக அலுவலர் தொடங்கி முதல்வர் வரை ஊழலில் ஊறி இருக்கிறார்கள். அதிலும் குறிப்பாக நாங்கள் சொன்ன ஊழல் பட்டியலில் 24 ஊழல் குற்றச்சாட்டுகளை சொல்லி இருக்கிறோம்.
PMK youth wing leader Anbumani Ramadoss submitted a report of loots in Tamilnadu government's 24 departments with evidences to governor Banwarilal purohit.