ஆர்.கே.நகரில் இரட்டை இலையை தோற்கடிக்கிறார் தினகரன்.. பரபரப்பு சர்வே முடிவுகள்- வீடியோ

Oneindia Tamil 2017-12-09

Views 2

ஆர்.கே.நகர் சட்டசபை இடைத் தேர்தலில் திமுக வெற்றி பெறும் என்றும், சுயேட்சை வேட்பாளர் டிடிவி தினகரன் 2வது இடத்தை பிடிப்பார் என்றும் பண்பாட்டு மக்கள் தொடர்பகம், லயோலா கல்லூரி முன்னாள் மாணவர்கள் நடத்திய கருத்து கணிப்பில் தெரியவந்துள்ளது. இந்த கருத்து கணிப்பு முடிவுகள் பெரும் சர்ப்ரைஸ்களை உள்ளடக்கியதாக உள்ளது. இந்த கருத்து கணிப்பு, 7 வார்டுகளில், இளைஞர், இளம் பெண்கள், பெரியவர்கள் என பல தரப்பிலிருந்தும் மொத்தம் 1267 பேரிடம் நடத்தப்பட்டுள்ளது.
கருத்து கணிப்பில் கூறப்பட்டுள்ள விவரங்களை பாருங்கள்.

ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் திமுக 33 சதவீத வாக்குகளை பெற்று முதலிடத்தில் உள்ளது. எனவே அக்கட்சி வேட்பாளர் வெற்றி பெற நல்ல வாய்ப்பு உள்ளது. அதேநேரம், ஆளும் கட்சியான அதிமுகவுக்கு, 26 சதவீதம் மட்டுமே வாக்குகள் கிடைக்குமாம்.
இதில் சர்ப்ரைஸ் என்னவென்றால், அதிமுகவைவிட டிடிவி தினகரனுக்கு அதிக வாக்குகள் கிடைக்குமாம். 28 சதவீதம் வாக்குகளை தினகரன் பெறுவார் என்கிறது இந்த கருத்து கணிப்பு. இந்த கருத்து கணிப்பு நம்பகத்தன்மையோடு இருக்கும்பட்சத்தில் அதிமுக வட்டாரத்தில் கிலி ஏற்படுவது உறுதி.

DMK will win in RK Nagar by poll, says a survey.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS