தொலைக்காட்சியில் நடிகராக அறிமுகமாகி காமெடியனாக பிரபலமான சந்தானம் இப்போது ஹீரோவாக திரைப்படங்களில் கலக்கி வருகிறார். சந்தானம் நடித்த சில படங்கள் வெளிவராமல் காத்திருக்கும் நிலையிலும், அவருக்கு தொடர்ந்து ஹீரோ வாய்ப்புகள் வந்துகொண்டிருக்கின்றன. சந்தானம் தன் குடும்பத்தைப் பற்றி திரையுலகிலும், மேடைகளிலும் பேசியதே இல்லை. என் குடும்பம் வேறு, திரை வாழ்க்கை வேறு என்று அவர் தெளிவாகக் கூறியிருக்கிறார்.
அந்த விதத்தில் தன் மனைவி, மகன் என யாரையும் எந்த ஒரு திரையுலக நிகழ்ச்சிக்கும் அழைத்து வராத சந்தானம் முதன்முறையாக தன் மகனை பொது நிகழ்ச்சிக்கு அழைத்து வந்துள்ளார். நேற்று மாலை சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்ற 'சக்க போடு போடு ராஜா' படத்தின் இசை வெளியீட்டு விழாவிற்கு சந்தானம் தன் மகன் நிபுனை அழைத்து வந்தார். சந்தானம் போலவே இருக்கும் நிபுன், ஸ்டைலாக இருக்கையில் அமர்ந்திருக்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. சந்தானம், தான் நடிக்கும் படங்களில் தன் மகன் நிபுனை குழந்தை நட்சத்திரமாக அறிமுகப்படுத்தினாலும் ஆச்சரியப் படுவதற்கில்லை. ஆனால், அவர் நடிக்க விரும்புகிறாரா என்பது சந்தானத்டஹி கேட்டால் தான் தெரியும்.
Actor Santhanam never talked about his family on stage. He clearly stated that my family is different, screen life is different. In this stage, For the first time santhanam was brought his son Nipun to the audio launch of 'Sakka Podu Podu Raja'.