தீவிரமடைகிறது காற்றழுத்த தாழ்வுமண்டலம்.. மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம்..வீடியோ

Oneindia Tamil 2017-12-07

Views 5.6K

வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறுவதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. அந்தமான் அருகே வங்கக்கடலில் உருவான காற்றழுத்தம் புயலாக மாற வாய்ப்புள்ளது என்றும், இது வட தமிழகம் மற்றும் தென் தமிழகம் இடையே கரையை கடக்கும் என்றும் சென்னை வானிலை மையம் தெரிவித்திருந்தது. இதனால் சென்னை மீண்டும் ஒரு கனமழையை பெறும் என்றும் எதிர்ப்பார்க்கப்பட்டது. இந்நிலையில் இந்த காற்றழுத்தம் ஆந்திரா நோக்கி நகர்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் இன்று செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, தென்கிழக்கு வங்க கடல் பகுதியில் நேற்று நிலை கொண்டிருந்த குறைந்த காற்றுழுத்த தாழ்வு மண்டலம் வடதிசையில் நகர்ந்து மசூலிப்பட்டினம் அருகே நிலை கொண்டிருப்பதாக அவர் கூறினார்.

வங்கக் கடலில் உருவாகியுள்ள இந்த குறைந்த காற்றுழுத்த தாழ்வு மண்டலம், வடக்கு ஆந்திரா, ஒடிசா கடற்கரை பகுதியை நோக்கி வரும் 9 ஆம் தேதி நகரும் என்றும் அவர் கூறினார். மேலும் இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறுவதாகவும் அவர் தெரிவித்தார்.



The Low depression formed in Bay of bengal is getting strong said Chennai meteorological center. The fishermen do not venture into sea on 8th and 9th December said Chennai meteorological center. The depression moving to north Andhra and Odisha.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS