தேயிலை தோட்டத்தில் உள்ள மலைப்பகுதியில் ஒய்யாரமாக படுத்து தூங்கும் சிறுத்தை புலியை வனத்துறையினர் பிடிக்க மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நீலகிரி மாவட்டம் அட்டடி கிராமத்தில் உள்ள மலைப்பகுதியில் சிறுத்தை புலி ஒன்று மூன்று மணி நேரத்திற்கும் மேல் ஒய்யாராமாக படுத்து உறங்கி கொண்டிருந்துள்ளது. அதனை பார்த்த தோட்ட தொழிலாளர்கள் அதிர்ச்சியில் பின்னங்கால் பிடரியடிக்க ஓட்டம் பிடித்தனர். அட்டடி கிராம மலைப்பகுதியில் சிறுத்தை புலி அடிக்கடி காட்டு விலங்குகள் மற்றும் வீட்டு விலங்குகளை அடித்து சாப்பிட்டு ஒய்யாரமாக படுத்து தூங்குவதை வழக்கமாக கொண்டுள்ளது என்றும் அச்சத்தை ஏற்படுத்தும் சிறுத்தைபுலியை வனத்துறையினர் பிடித்து வனப்பகுதிக்குள் விட வேண்டும் என்று தோட்ட தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Des : People have been requested to catch a leopard lying on the mountain in the tea estate