மறைந்த பழம்பெரும் பாலிவுட் நடிகர் சசி கபூரின் உடல், அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது. கொட்டும் மழையிலும் பாலிவுட் திரைப் பிரபலங்கள் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர்.
1970 - 80ம் ஆண்டுகளில் இந்தி திரையுலகில் காதல் படங்களில் நடித்துக் கொடிகட்டிப் பறந்தவர் சசி கபூர். 1938-ல் பிறந்த இவர், 4 வயதில் குழந்தை நட்சத்திரமாகத் திரையுலகில் நுழைந்தார்.
'தர்மபுத்ரா' படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமான இவர், 'தீவார்', 'சில்சிலா', 'சத்யம் சிவம் சுந்தரம்' உள்ளிட்ட 160-க்கும் அதிகமான படங்களில் நடித்துள்ளார்.கடந்த சில ஆண்டுகளாக, உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த சசி கபூர், மும்பை கோகிலாபென் திருபாய் அம்பானி மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டிருந்தார். சிகிச்சை பலனளிக்காமல் நேற்று மாலை சசி கபூர் காலமானார்.
Late legendary Bollywood actor Shashi Kapoor's funeral ceremony held today. Amitabh Bachchan, Abhishek Bachchan, Aishwarya Rai, Shah Rukh Khan, Saif Ali Khan, Anil Kapoor, Sanjay Dutt, Nasruddin Shah, Ranbir Kapoor, Randhir Kapoor, Rishi Kapoor and many other Bollywood celebrities paid last respect to Shashi kapoor.