ஆர்.கே. நகர் இடைத்தேர்தல் அன்று யாரும் விஷாலை அடுச்சுடாதீங்கய்யா- வீடியோ

Filmibeat Tamil 2017-12-05

Views 1.1K

ஆர்.கே. நகர் இடைத்தேர்தல் அன்று யாரும் விஷால் மீது கை வைத்துவிடாமல் இருக்க வேண்டும். V shall ஆப்பை அறிமுகம் செய்து வைத்த நடிகரும், தயாரிப்பாளருமான விஷால் திடீர் என்று ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் சுயேட்சையாக போட்டியிடுகிறார். பைக்கில் வந்து வேட்புமனுவையும் தாக்கல் செய்துவிட்டார். ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் விஷாலுக்கு வெற்றி பெறும் அளவுக்கு வாக்குகள் கிடைப்பது கடினம் என்று கருத்து கணிப்புகள் கூறுகின்றது. இது விஷாலுக்கே தெரியுமாம்.
நடிகர் சங்க தேர்தல் நாள் அன்று விஷாலை அடித்துவிட்டார்கள் அவர் மயங்கிவிட்டார் என்று எல்லாம் கூறி வாக்குச்சாவடி பரபரத்தது. இதையடுத்து விஷால் வெற்றி பெற்றுவிட்டார். ஆர்.கே. நகர் வாக்குப்பதிவு நாள் அன்று யாராவது விஷால் மீது கையை வைத்தால் அனுதாப அலை வீசி அதன் மூலம் வாக்குகள் பெற்று அவர் சமஉ ஆவதை யாராலும் தடுக்க முடியாது. யாரும் அவரை அடுச்சுப்புடாதீங்கய்யா...
எங்கு தேர்தல் நடந்தாலும் விஷால் போட்டியிடுவார் என்று நெட்டிசன்ஸ் கலாய்க்கிறார்கள். இந்நிலையில் தான் அவர் ஆர்.கே. நகர் இடைத்தேர்தலிலும் போட்டியிடுகிறார்.

Actor Vishal is contesting in the RK Nagar bypoll 2017. Fellow candidates should make sure that Vishal is not attacked on the polling day else no one could stop him from becoming RK Nagar MLA.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS