கடந்த ஆண்டு டிசம்பர் 5ஆம் தேதியான இதேநாளில் ஜெயலலிதா காலமானார் என்ற அந்த அதிர்ச்சிகரமான ஃபிளாஷ் நியூஸ் வெளியானது.
தமிழக முதல்வராக 6வது முறையாக கடந்த 2016ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் பதவியேற்றார் ஜெயலலிதா. எம்ஜிஆருக்குப் பிறகு 2011 மற்றும் 2016ஆம் ஆண்டு என தொடர்ந்து இருமுறை பதவியேற்றவர்.
கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 22ஆம் தேதி திடீர் உடல்நலக் குறைவால் இரவு 10.30 மணிக்கு சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அதுவரை அதிமுக தொண்டர்கள் அதிகம் கேள்விப் படாத சம்பவம் அது.
ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்றதுமே ஆடிதான் போயினர் அதிமுக தொண்டர்கள். அவருக்கு அப்பல்லோ மருத்துவர்கள், லண்டன் டாக்டர் ரிச்சர்ட் பீலே, சிங்கப்பூர் மருத்துவர்கள் குழு, டெல்லி எய்ம்ஸ் மருத்துவர்கள் என தொடர்ந்து சிகிச்சையளித்து வந்தனர்.
ஜெயலலிதா குணமடைந்துவிட்டார் விரைவில் வீடு திரும்புவார் என அதிமுக நிர்வாகிகளும் அப்பல்லோ மருத்துவர்களும் தெரிவித்தனர். இதனால் ஜெயலலிதா நிச்சயம் மீண்டு வருவார் என்ற நம்பிக்கையுடனே இருந்தனர் அதிமுக தொண்டர்கள்.