யோ-யோ டெஸ்டில் கலக்கிய யுவராஜ் சிங்.. விடைபெறும் நாளை முடிவு செய்தார்!- வீடியோ

Oneindia Tamil 2017-12-05

Views 10.4K

இந்திய அணியில் இடம்பெற செய்யப்படும் கஷ்டமான யோ யோ டெஸ்டில் யுவராஜ் சிங் கலந்து கொண்டு இருக்கிறார். இதில் மிகவும் சிறப்பாக செயலாற்றி அவர் தனது பிட்னஸை நிரூபித்து இருக்கிறார்.

மேலும் அவர் இது குறித்து பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டி அளித்து இருக்கிறார். அதேபோல் தன்னுடைய வாழ்க்கையில் நடந்த சோகமான தோல்விகள் குறித்தும் பேசினார்.
அந்த வீடியோவில் அவர் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு அடையும் நாளை குறித்தும் பேசி இருக்கிறார். மேலும் உணர்ச்சிபூர்வமாக சில விஷயங்களை பகிர்ந்து உள்ளார். யோ யோ தேர்வு என அழைக்கப்படும் பிட்னஸ் தேர்வில் வெற்றி பெறுவது மிகவும் கடினம் ஆகும். இதில் சரியாக செயல்படுபவர்கள் மட்டுமே இந்திய அணியில் இடம்பிடிப்பார்கள். சில நாட்களுக்கு முன் அஸ்வின் இந்த தேர்வில் வெற்றி பெற்றார். அதேபோல் நெஹ்ராவும் தன்னுடைய கடைசி போட்டியில் விளையாடுவதற்காக இந்த தேர்வில் கலந்து கொண்டு வெற்றி பெற்றார். ஆனால் ரெய்னா இந்த தேர்வில் மோசமாக தோல்வி அடைந்தார். இந்த கடினமான யோ யோ டெஸ்டில் நேற்று யுவராஜ் சிங் கலந்து கொண்டார். அதில் அவர் மிகவும் சிறப்பாக செயல்பட்டு இருக்கிறார். மேலும் கொடுக்கப்பட்ட டாஸ்குகள் அனைத்தையும் சரியாக முடித்து இருக்கிறார். இந்த நிலையில் அவர் வெற்றிகரமாக யோ யோ டெஸ்டை முடித்தார். இதன் மூலம் அவர் தனது முழு உடல் தகுதியை நிரூபித்து உள்ளார்.


Indian spin bowler Yuvraj Singh has performed in yo yo test. He gave his best and cleared the test.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS