இங்கிலாந்துக்கு எதிரான ஆஷஸ் தொடரில் ஆஸ்திரேலிய வீரர் புடித்த கேட்ச் ஒன்று தற்போது வைரலாக பரவி வருகிறது.
ஆஸ்திரேலியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 2-வது ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி அடிலெய்டில் நடைபெற்று வருகிறது. பகல் - இரவு ஆட்டமாக நடைபெறும் இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பீல்டிங் தேர்வு செய்தது.
டேவிட் வார்னர் (47), கவாஜா (53), ஸ்மித் (40) ஆகியோரின் ஆட்டத்தால் ஆஸ்திரேலியா முதல்நாள் ஆட்ட முடிவில் 81 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 209 ரன்கள் சேர்த்திருந்தது. ஹேண்ட்ஸ்காம்ப் 36 ரன்னுடனும், ஷேன் மார்ஷ் 20 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.
இன்று 2-வது நாள் ஆட்டம் தொடங்கியது. ஹேண்ட்ஸ்காம்ப் நேற்று எடுத்திருந்த 36 ரன்னிலேயே ஆட்டம் இழந்தார். அடுத்து ஷேன் மார்ஷ் உடன் விக்கெட் கீப்பர் பெய்ன் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி சிறப்பாக விளையாடியது. இருவரும் அரைசதம் அடித்தனர். பெய்ன் 57 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தார். அடுத்து வந்த ஸ்டார்க் 6 ரன்னில் வெளியேறினார்.
Spinner Nathan Lyon sets the standard for catch of the summer, diving full length to his left to remove England's Moeen Ali at Adelaide Oval