ஆர்கே நகர் இடைத்தேர்தலில் போட்டியிடும் நடிகர் விஷால் விசில் சின்னம் கேட்டுள்ளார். மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் ஆர்கே நகர் தொகுதிக்கு வரும் 21ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான பணிகளில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. வேட்புமனு தாக்கல் செய்ய இன்று தான் கடைசி நாள் என்பதால் அரசியல் கட்சி வேட்பாளர்கள் மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் ஆர்வமுடன் மனுத்தாக்கல் செய்தனர்.
ஆர்கே நகர் இடைத்தேர்தலில் நடிகர் விஷாலும் போட்டியிடுகிறார். இதனை முன்னிட்டு சென்னை ராமாபுரத்தில் உள்ள எம்ஜிஆரின் வீடு சென்னை மெரினாவில் உள்ள அறிஞர் அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரின் நினைவிடங்களில் விஷால் மரியாதை செலுத்தினார்.
இதைத்தொடர்ந்து ஆர் கே நகர் தொகுதி தேர்தல் அதிகாரியிடம் அவர் வேட்பு மனுத்தாக்கல் செய்யவுள்ளார். வேட்பு மனுத்தாக்கல் செய்ய விஷால் ஆர்கே நகருக்கு பைக்கில் சென்றார்.
இந்நிலையில் தனது வேட்பு மனுவில் விஷால் விசில் சின்னம் ஒதுக்குமாறு தேர்தல் ஆணையத்துக்கு கோரிக்கை விடுத்துள்ளார். அப்படி இல்லாத பட்சத்தில் கேரம்போர்டு அல்லது படகு சின்னம் ஒதுக்குமாறு விஷால் கோரிக்கை விடுத்துள்ளார்.
Actor vishal also contensting in RK Nagar by poll. He is nominating today. He has asked Visil symbol in the RK Nagar by poll 2017.