மோகன் ராஜா இயக்கத்தில் நயன்தாராவுடன் சிவகார்த்திகேயன் நடித்து வரும் 'வேலைக்காரன்' படம் ரிலீஸுக்கு தயாராகி வரும் நிலையில் அடுத்து பொன்ராம் படத்தில் நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன்.
இன்னும் பெயரிடப்படாத பொன்ராம் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சமந்தா நடித்து வருகிறார். திருமணத்திற்கு பின்பு செம க்யூட்டாக தாவணியில் நடித்து வருகிறார் சமந்தா.
ஏற்கெனவே, சிவகார்த்திகேயன் - பொன்ராம் காம்போவில் ரிலீஸான 'வருத்தப்படாத வாலிபர் சங்கம்' மற்றும் 'ரஜினி முருகன்' ஆகிய படங்கள் ஹிட்டானதை அடுத்து இது மூன்றாவது படமாகும்.இந்தப் படத்தின் அறிவிப்பு வந்த நாளிலிருந்தே ரசிகர்களின் எதிர்பார்ப்பு உச்சத்தில் உள்ளது. படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை 2018 பிப்ரவரி 17-ம் தேதி ரிலீஸ் செய்யத் திட்டமிட்டுள்ளனர். இப்படத்திற்கென சமந்தா பிரத்யேகமாக சிலம்பாட்டப் பயிற்சி கற்றுக்கொண்டார்.இந்தப் படத்தில் சூரி, நெப்போலியன், சிம்ரன், லால், மொட்டை ராஜேந்திரன், மனோபாலா, யோகி பாபு என பெரிய நட்சத்திரப் பட்டாளமே நடித்து வருகிறது. டி.இமான் இசையமைத்து வரும் இப்படத்திற்கு பாலசுப்ரமணியம் ஒளிப்பதிவு செய்கிறார்.
Samantha is acting opposite Sivakarthikeyan in Ponram's film 'SK12'. The shooting of this film is going on in Courtallam and Tenkasi. The shooting video is now goes viral on the social networks.