விஜய் சேதுபதி, கௌதம் கார்த்திக் ஆகியோர் நடித்திருக்கும் 'ஒரு நல்லநாள் பாத்து சொல்றேன்' படத்தின் டீசர் சமீபத்தில் வெளியானது. ஆறுமுக குமார் இயக்கிய இந்தப் படத்தின் டீசரில், ராமாயணத்தில் வரும் ராமன் மற்றும் ராவணனைப் பற்றிய வசனங்கள் இடம்பெற்றுள்ளன. ராமனைப் பற்றிய வசனத்தால் பா.ஜ.க ஆதரவாளர்கள் விஜய் சேதுபதி படத்தைப் புறக்கணிக்க வேண்டும் எனவும், படத்தை வெளியிடக்கூடாது எனவும் கோரி வருகின்றனர். விஜய் சேதுபதி பல கெட்டப்புகளில் வரும் 'ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்' படத்தில் காயத்ரி நடித்துள்ளார். சிரஞ்சீவி குடும்பத்தைச் சேர்ந்த நடிகை நிஹாரிகாவும் இப்படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். சமீபத்தில் வெளியாகியுள்ள இந்தப் படத்தின் டீசரில் 'ராமன் நல்லவனா, ராவணன் நல்லவனா... என விஜய் சேதுபதி வசனம் பேசுவது இடம்பெற்றிருக்கிறது. இது ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. "ராவணன் சீதையைத் தூக்கிட்டு வந்து கைபடாம பத்திரமா வெச்சுருந்தானா.. அவனை நாம அரக்கன்னு சொல்றோமா... ராமன் சீதையைக் காப்பாத்தி கொண்டுபோய் அவளைச் சந்தேகத் தீயில போட்டு எரிச்சானா... அவன நாம கடவுள்னு சொல்றோமா..." என வசனம் பேசியிருக்கிறார் விஜய் சேதுபதி.
Vijay Sethupathi and Gautham Karthik starer 'Oru Nalla naal Paathu Solrom' diirected by Arumugam Kumar. The teaser of this film has contains dialogues about Raman and Ravan. With the verse of Raman, BJP supporters are demanding that Vijay Sethupathi film should not be released.