வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்தத்தால் எதிர்பார்த்த அளவுக்கு மழை இருக்காது என தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார். அது ஒரு மொக்க காற்றழுத்தம் என்றும் அவர் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அண்மையில் வங்கக்கடலில் உருவான ஓகி புயல் கன்னியாகுமரி நெல்லை உள்ளிட்ட தென்மாவட்டங்களில் வெள்ளப் பெருக்கு ஏற்படும் அளவுக்கு கனமழையை கொடுத்தது. அதேபோல் பலத்த காற்றால் கன்னியாகுமரி மாவட்டத்தையும் சூறையாடியது. இதன் தாக்கத்தில் இருந்து கன்னியாகுமரி இன்னும் மீளாத நிலையில் வங்கக்கடலில் அந்தமான் அருகே புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளதாக சென்னை வானிலை மையம் அறிவித்தது. மேலும் இது புயலாக மாற வாய்ப்புள்ளதாக கூறிய வானிலை மையம் வட தமிழகம் மற்றும் தெற்க ஆந்திரா இடையே கரையை கடக்கலாம் என்றும் கூறியது.
இதன் காரணமாக சென்னை உட்பட வடதமிழகத்தில் மீண்டும் கன மழையும் பெய்யும் என்றும் கூறப்பட்டது. இதனால் மக்கள் பெரும் எதிர்ப்பார்ப்பில் உள்ளனர்.
இந்நிலையில் தமிழ்நாடு வெதர்மேன் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் இந்த காற்றழுத்த தாழ்வுநிலை குறித்து பதிவிட்டுள்ளார். அதில் இந்த காற்றழுத்தம் ஒரு மொக்க காற்றழுத்தம் என அவர் தெரிவித்துள்ளார்.