ஆர்.ஜே. பாலாஜி போட்ட ட்வீட்டை பார்த்த நெட்டிசன்ஸ் சிம்புவை கலாய்த்துக் கொண்டிருக்கிறார்கள். விக்னேஷ் சிவனின் தானா சேர்ந்த கூட்டம் படப்பிடிப்பு முடிந்துவிட்டது. இந்நிலையில் டப்பிங் உள்ளிட்ட பிற பணிகள் நடந்து வருகிறது. ஆர்.ஜே. பாலாஜி தனக்கான டப்பிங் பணியை செய்துள்ளார். இதை அவர் ட்விட்டர் மற்றும் ஃபேஸ்புக்கில் தெரிவித்தார். டப்பிங் செய்கிறேன்... படத்தின் பெயரை கண்டுபிடியுங்கள் என்று கூறி ஸ்டுடியோவில் இருந்து செல்ஃபி எடுத்து ட்விட்டர், ஃபேஸ்புக்கில் வெளியிட்டுள்ளார் ஆர்.ஜே. பாலாஜி. ஆர்.ஜே. பாலாஜியின் ட்வீட்டை பார்த்தவர்கள் நீங்கள் இருக்கும் இடம் ஸ்டுடியோ என்றால் அது டிஎஸ்கே டப்பிங், பாத்ரூம் என்றால் அது அன்பானவன் அசராதவன் அடங்காதவன் 2 டப்பிங் என தெரிவித்துள்ளனர். சாதாரண மக்கள் தான் ஸ்டுடியோவில் டப்பிங் பேசுவார்கள். லெஜண்டுகளால் மட்டும் தான் பாத்ரூமில் இருந்து டப்பிங் பேச முடியும் என்று ஒருவர் கமெண்ட் போட்டுள்ளார். அன்பானவன் அசராதவன் அடங்காதவன் படத்தின் டப்பிங் பேச ஸ்டுடியோவுக்கு வர மறுத்த சிம்பு தனது வீட்டு பாத்ரூமில் அமர்ந்து செல்போனில் பேசி அனுப்பி வைத்துள்ளார். அதை தான் நெட்டிசன்ஸ் கலாய்க்கிறார்கள்.
RJ Balaji posted a selfie of him while doing dubbing for Suriya starrer TSK on social media. Netizens are making fun of Simbu after seeing Balaji's post and tweet.