வரும் 4, 5 தேதிகளில் கனமழை பெய்யும், மக்கள் வெளியே வரவேண்டாம்: அமைச்சர் எச்சரிக்கை!

Oneindia Tamil 2017-12-02

Views 6.1K

வரும் 4, 5ஆம் தேதிகளில் கனமழை பெய்யும் என்பதால் மக்கள் விடுகளை விட்டு வெளியே வரவேண்டாம் என அமைச்சர் எம்சி சம்பத் எச்சரித்துள்ளார். தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை மீண்டும் தீவிரமடைந்துள்ளது. ஓகி புயல் தென் தமிழகத்திற்கு நல்ல மழையை கொடுத்துள்ள நிலையில் தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் தொடர்ந்து பரவலாக மழை பெய்துவருகிறது.

இதனிடையே அந்தமான் அருகே உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுநிலை புயலாக மாற வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதனால் வடதமிழகத்தில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் கடலூரில் மழை குறித்து அமைச்சர் எம்சி சம்பத் ஆய்வு செய்தார். அப்போது பேசிய அவர் வரும் 4 மற்றும் 5ஆம் தேதிகளில் கனமழை பெய்யும் என்பதால் மக்கள் வீடுகளை விட்டு வெளியே வரவேண்டாம் என்றார். மழையின் போது பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்றும் அவர் கூறினார். மேலும் புயல் பிரச்சனைகள் ஓயும் வரை கடலூர் மாவட்ட மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்றும் அமைச்சர் எம்சி சம்பத் கேட்டுக்கொண்டார்.

Heavy rain will be there so People dont come out on coming 4th and 5th said Minister MC Sampath in Cuddalore. He also said Fishermen dont go to sea until cyclone issues over.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS