காவிரியில் இருந்து 63 டிஎம்சி நீர் திறக்க உத்தரவிடக்கோரும் தமிழக அரசின் கோரிக்கையை ஏற்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது. காவிரி நதி நீர்ப் பங்கீடு தொடர்பாக 2007-இல் காவிரி நடுவர் மன்றம் அளித்த இறுதித் தீர்ப்பை எதிர்த்து தமிழகம், கர்நாடகம், கேரளம், புதுவை ஆகிய மாநிலங்கள் உச்சநீதிமன்றத்தில் மனுக்களைத் தாக்கல் செய்துள்ளன. இதுதொடர்பான விசாரணை கடந்த 10 ஆண்டுகளாக உச்சநீதிமன்றத்தில் நடைபெறுகிறது.
காவிரி நதி நீர் பங்கீடு விவகாரத்தில் அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்தது. காவிரி வழக்கில் மாநில அரசுகள் சார்பில் தொழில்நுட்ப வல்லுநர்கள் கருத்தை தெரிவிக்க பெறுவதற்காக உச்சநீதிமன்றம் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தது. தமிழகத்துக்கு காவிரியிலிருந்து 63 டிஎம்சி தண்ணீரை திறந்துவிட கோரி புதிய மனுவை தாக்கல் செய்வதற்காக தமிழக அரசைச் சேர்ந்த சட்ட வல்லுநர்கள் டெல்லியில் கடந்த சில தினங்களாக முகாமிட்டிருந்தனர். இந்நிலையில் அதுகுறித்து மனு தாக்கல் செய்ய உச்சநீதிமன்றத்தில் அனுமதி கோரினர்.
Supreme Court dismisses petition by Tamilnadu government, seeking water release from Cauvery.