தனிக்கட்சி தொடங்கினால் கமலுக்கே வெற்றி வாய்ப்பு - நியூஸ் 7 சர்வே- வீடியோ

Oneindia Tamil 2017-12-01

Views 19.2K

நடிகர்கள் ரஜினி, கமல், விஜய் தனிக்கட்சி தொடங்கினால் நடிகர் கமல்ஹாசனுக்கே மக்கள் ஆதரவு அதிகம் உள்ளது. ரஜினி, கமல், விஜய் மூவரில் திரையுலகிலிருந்து அரசியலுக்கு அடுத்து யார் வருவார்? வந்தால் மக்களின் ஆதரவு எப்படி இருக்கும்? என்பதை அறிந்துகொள்ளும் வகையில் தமிழகம் மற்றும் புதுச்சேரி முழுவதும் மக்கள் மனசுல யாரு என்ற மாமெரும் கருத்துகணிப்பு நடத்தப்பட்டது. இந்த கருத்துக்கணிப்பில் பெரும்பான்மையான மக்கள் கமலுக்கே ஆதரவு அளித்துள்ளனர். மக்கள் மனதில் கமல்ஹாசனே இடம் பெற்றுள்ளார். அதே நேரத்தில் நடிகர்கள் அரசியலுக்கு வருவதை பலர் விரும்பவில்லை.

ரஜினி, கமல், விஜய் அரசியல் கட்சி தொடங்கினால் யாருக்கு ஆதரவு என்று கேட்கப்பட்டது. அதற்கு மக்கள் அளித்த பதில்: கமல் - 42.4% ரஜினி - 32.8% விஜய் - 24.6% யாருக்குமில்லை 0.2%

அரசியல் கட்சி தொடங்கும் நடிகர்கள் கூட்டணி வைத்தால் அது யாருடன் என்பதைப் பொறுத்தே மக்கள் ஆதரவு உள்ளது. தனிக்கட்சிக்கு மட்டுமே ஆதரவு - 39.7% கூட்டணிக்கு மட்டுமே ஆதரவு - 13.3% யாருடன் கூட்டணி என்பதைப் பொறுத்தே ஆதரவு - 47%

ரசிகர்கள் பலத்தை வாக்குவங்கியாக மாற்றும் சக்தியுள்ளவர்கள் யார் என்ற கேள்விக்கு மக்கள் கருத்து: கமல் - 25% ரஜினி - 29.8% விஜய் - 21.7% மூவருமில்லை - 23.5%
எம்ஜிஆர், ஜெயலலிதாவிற்குப் பிறகு அரசியலில் இருந்து வந்த நடிகர்கள் யாரும் பெரிதாக ஜெயிக்கவில்லை. ஜெயலலிதா மரணத்திற்குப் பிறகு நடிகர்கள் பலர் முதல்வர் கனவில் மிதக்கின்றனர். மக்கள் மனதில் என்ன இருக்கிறது என்பதை அறிந்து கொள்ள நடத்தப்பட்ட இந்த கருத்துக்கணிப்பில் நடிகர்களுக்கு ஆதரவாக கூறியதைப் போல யாருக்கும் ஆதரவு இல்லை என்கிற ரீதியிலேயே பெரும்பான்மையோனோர் கருத்து கூறியுள்ளனர்.

News 7 TV survey has said that People support to Actor Kamal Haasan Party. News 7 join hands Kumudam survey about Rajin, kamal and Vijay Makkal Manasula Yaru.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS