நாளை மாலை வரை கனமழைக்கு வாய்ப்புள்ளதாக நார்வே நாட்டு வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கன்னியாகுமரி அருகே நிலைக்கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுமண்டலம் ஓகி புயலாக உருவாகி உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
கன்னியாகுமரி அருகே 60 கிலோமீட்டர் தொலைவில் ஓகி புயல் உருவாகியுள்ளது. புதிதாக உருவான ஓகி புயலால் தென்மாவட்டங்களில் கனமழை பெய்யுக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.தென் தமிழகத்தில் கடலோர பகுதியில் மணிக்கு 65 முதல் 75 கிலோமீட்டர் வேகத்தில் காற்றுவீசும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது. ஓகி புயல் உருவாகியுள்ளதை அடுத்து கன்னியாகுமரி, தூத்துக்குடி, நெல்லை, விருதுநகர், தஞ்சை,திருவாரூர், நாகை, புதுக்கோட்டை மாவட்டங்களில் கனமழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.சென்னையில் நேற்றிவு முதல் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது.இந்நிலையில் சென்னையில் இன்றைய பொழுதுக்கு இனி விட்டு விட்டு லேசான மழைதான் பெய்யும் என நார்வே நாட்டு வானிலை மையம் தெரிவித்துள்ளது.
Chennai will get heavy rain till tomorrow evening said Norway meteorological center. particularly early morning Chennai will get heavy rains said Norway meteorological.