டெல்லியில் பயங்கரம்.. 20 குண்டுகளால் துளைத்து கொல்லப்பட்ட தொழிலதிபர்.. வைரலான சிசிடிவி வீடியோ

Oneindia Tamil 2017-11-30

Views 10.1K

டெல்லியில் சில நாட்களுக்கு முன்பு நடந்த கொலை ஒன்றின் சிசிடிவி பதிவுகள் தற்போது வெளியாகி இருக்கிறது. டெல்லியை அதிரவைத்த அந்த கொலையின் வீடியோ தற்போது இணையம் முழுக்க வைரல் ஆகியுள்ளது. மக்கள் நடமாடும் சாலையில் இப்படி ஒரு கொலையா என்று மக்கள் அந்த வீடியோ குறித்து கேள்வி எழுப்பி வருகின்றனர். இந்த சம்பவத்தில் கொல்லப்பட்டது டெல்லியை சேர்ந்த முக்கியமான தொழில் அதிபர் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. அவர் உடலில் துப்பாக்கியை வைத்து மர்ம நபர் சுடும் காட்சிகள் பதைபதைப்பை ஏற்படுத்தும் வண்ணம் இருக்கிறது.

டெல்லியின் பிரம்மபுரி என்ற பகுதியில் சில நாட்களுக்கு முன்பு வஷித் என்ற தொழில் அதிபர் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டார். ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுபட்டு வந்த அவர் தொழில் பகை காரணமாக கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்று கூறப்பட்டது. இந்த கொலை நடந்து பல நாட்கள் ஆகியும் வழக்கில் எந்த விதமான முன்னேற்றமும் ஏற்படாமல் இருந்தது.

A businessman named Wasid killed in Delhi few days ago. Now police got the CCTV footage of the murder, in which he shot dead by 22 bullets.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS