ஒரு படம் முடிவதற்குள் அடுத்த படம்…பலே இயக்குநர்கள்!- வீடியோ

Filmibeat Tamil 2017-11-29

Views 10.4K

தமிழ் சினிமாவில் ஒரு படத்தின் மார்க்கெட்டை அந்த படத்தின் ஹீரோவோ இயக்குநரோ அவரின் முந்தைய படத்தின் கலெக்‌ஷனை வைத்து நிர்ணயிக்கும் முறை இருக்கிறது. இதுதான் தமிழ் சினிமா இந்த மோசமான நிலைக்கு செல்ல ஒரு முக்கிய காரணம்.
இந்த ஃபார்முலா புரிந்து கொண்ட ஹீரோக்கள் தங்களது ஒரு படத்தின் ஷூட்டிங் சென்றுக் கொண்டிருக்கும்போதே அடுத்த படத்தை தொடங்கி விடுகிறார்கள். இந்த படத்தின் வெற்றி, தோல்வி அவர்களை பாதிக்காத அளவுக்கு பார்த்துக்கொள்கிறார்கள். இளம் இயக்குநர்களும் இந்த ஃபார்முலாவை கடைபிடித்தால் இன்னும் குப்பையான படங்கள் தான் வந்து ரசிகர்களை சோதிக்கும்.

ஸ்லிம் நடிகை ஆசை ஆசையாக பார்த்து உருவாக்கிய ஹோட்டல் சரியாக போகாததால் அதை விற்க முடிவு செய்திருக்கிறாராம்.
ஸ்லிம் நடிகை திருமணத்துக்கு பிறகு நடிக்க மாட்டேன் என்று சொன்னார். பின்னர் மற்ற நடிகைகள் போலவே நடிக்க வந்துவிட்டார். பிசினஸில் முதலீடு செய்யலாம் என்று பார்த்து பார்த்து ஈசிஆரில் ஒரு ஹோட்டல் கட்டினார். திறந்து இரண்டு ஆண்டுகள் ஆகியும் ஹோட்டலுக்கு எந்த வரவேற்பும் இல்லை. எனவே நடிப்பதில் மட்டும் கவனம் செலுத்துவது என்ற முடிவுக்கு வந்திருக்கிறாராம்.


K town directors are nowadays starting their next project even before completing their current project. Senior Slim actress has decided to sell her hotel due to non profit.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS