அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் மகள் இவாங்கா டிரம்ப் இந்தியா வந்துள்ளார். இவாங்கா டிரம்ப், டொனால்ட் டிரம்பிற்கு முதன்மை ஆலோசகராகவும் செயல்பட்டு வருகிறார். ஹைதராபாத்தில் நடக்கும் சர்வதேச தொழில்முனைவோர் மாநாட்டில் கலந்து கொள்ள இவாங்கா டிரம்ப் இந்தியா வந்துள்ளார். இதன் ஒருபகுதியாக நேற்று ஹைதராபாத்தில் பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். இவாங்கா வருகைக்காக நிறைய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. முக்கியத்துவம் தரப்பட்டது. இவாங்காவிற்கு மோடி அரசு இவ்வளவு மதிப்பளித்து ஏன் என்று கேள்வி உருவாகியுள்ளது.
இவாங்கா டிரம்ப் வருகைக்கு ஒரு மாதத்திற்கு முன்பாகவே ஹைதராபாத்தில் பிச்சை எடுக்க தடை விதிக்கப்பட்டது. தெருவில் எந்த நாயும் இருக்க கூடாது என்பதற்காக பல தெரு நாய்களுக்கு விஷம் கொடுக்கப்பட்டது. பாலங்களுக்கு வித்தியாசமாக பெயிண்ட் அடித்து அழகுபடுத்தப்பட்டது.
நேற்று முக்கியமாக இவாங்காவிற்கு ரெட் கார்பெட் மரியாதை அளிக்கப்பட்டது. இந்த சம்பவம் பலரையும் ஆச்சரியப்படுத்தியது. பெரும்பாலும் இந்தியா வரும் ராஜ குடும்பங்களுக்கு மட்டுமே இந்த மரியாதை அளிக்கப்படும். அதிபரின் மகள் ஒருவருக்கு முதல்முறையாக இவ்வளவு மரியாதை அளிக்கப்பட்டுள்ளது. கடைசியாக இங்கிலாந்து ராணி டயானாவிற்கு சிவப்பு கம்பள மரியாதை அளிக்கப்பட்டது.
அதேபோல் நேற்று நடந்த இன்னொரு விஷயமும் பெரிய விவாதத்தை உருவாக்கியது. இவாங்காவிற்கு பாதுகாப்பாக முன்னும் பின்னும் மொத்தாமாக 34 கார்கள் சென்றது. பிரதமருக்கும், ஜனாதிபதிக்கும் கூட இத்தனை கார்கள் சென்றது இல்லை. அதேபோல் இரண்டு ஆம்புலன்ஸ்களும் சென்றது. இந்தியாவில் மிகப்பெரிய மரியாதை அளிக்கப்பட்ட ஒரே நபர் இவர் மட்டும்தான். இந்தியா வந்திருந்த அமெரிக்க அதிபர்களுக்கு கூட இவ்வளவு பாதுகாப்பு இல்லை.
Ivanka Trump, the daughter of US President Donald Trump and his advisor visits India for Global Entrepreneurship Summit. She met PM Modi today. Ivanka Trump is the first woman to get red carpet after Diana.