விடுதியின் சட்ட விதிகளை மீறி ஓழுங்கீனமாக நடந்து வந்த மாணவிகளை தட்டிக்கேட்ட சகமாணவிகளை அடித்து உதைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
போடியில் நாடார் உறவின் முறைக்கு சொந்தமான பெண்கள் விடுதியுள்ளது. இந்த விடுதியில் தமிழகம் கேரளாவை சேர்ந்த மாணவிகள் தங்கி அருகில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் படித்து வருகின்றனர். விடுதியில் தங்கி படிக்கும் மாணவிகளில் ஒருசில மாணவிகள் அருகில் உள்ள மாணவர் விடுதிக்கு அடிக்கடி சென்று நீண்ட நேரம் தங்குங்வதுடன் தவறான செயல்களில் ஈடுபடுவது சகமாணவிகளுக்கு தெரிய வந்துள்ளது. இது குறித்து விடுதியில் தங்கியுள்ள மாணவிகள் அபிநயா மற்றும் மஞ்சுபிரியா ஆகியோர் சம்மந்தப்பட்ட மாணவிகளிடம் கேட்ட போது அவர்கள் இருவரையும் சராமரியாக தாக்கியுள்ளனர். இதில் இருவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைகாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.