அமலா பால் லடாக் சென்றாலும் வாகன பதிவு எண் பிரச்சனை அவரை விடாமல் துரத்துகிறது. சுசி கணேசன் இயக்கத்தில் அமலா பால், பிரசன்னா, பாபி சிம்ஹா உள்ளிட்டோர் நடித்த திருட்டுப் பயலே 2 வரும் 30ம் தேதி ரிலீஸாக உள்ளது. இந்நிலையில் அமலா லடாக்கில் உள்ளார். லடாக்கில் அவர் பைக் ஓட்டியபோது எடுத்த புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அமலா பால் கர்நாடகா பதிவு எண் கொண்ட பைக்கை லடாக்கில் ஓட்டியுள்ளார். அந்த புகைப்படத்தை அவர் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அமலா பால் கர்நாடகா பதிவு எண் கொண்ட வாகனத்தில் அமர்ந்திருக்கிறார். இல்லை என்றால் புதுச்சேரி வாகனத்தில் தான் பார்க்க முடிகிறது என்று ஒருவர் கலாய்த்துள்ளார். வரி செலுத்தாமல் இப்படி இருப்பது சரி அல்ல என ஒருவர் கமெண்ட் போட்டுள்ளார். பென்ஸ் கார் வாங்கிய அமலா பால் வரி ஏய்ப்பு செய்து போலி முகவரி கொடுத்து தனது வாகனத்தை புதுச்சேரியில் பதிவு செய்தார். அதை தான் நெட்டிசன்ஸ் சுட்டிக்காட்டி வருகிறார்கள்.
Amala Paul is riding a KA registration bike in Ladakh. Netizens are making fun of her saying that she either uses PY registered vehicle or KA one. Amala Paul is in trouble after she registered her Benz in Puducherry giving fake address.