தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் மருத்துவசிகிச்சைக்காக இன்று விமானம் மூலம் சிங்கப்பூர் சென்றார். தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் மருத்துவ சிகிச்சைக்காக இன்று மீண்டும் சிங்கப்பூர் சென்றார். கடந்த சில ஆண்டுகளாக தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் உடல் நலம் பாதிக்கப்பட்டு இருக்கிறார். இதற்காக சிங்கப்பூரில் மருத்துவ சிகிச்சை மேற்கொண்டு, சில மாதங்களுக்கு முன்னர் சென்னை திரும்பினார் .
தற்போது மீண்டும் மருத்துவ பரிசோதனைக்காக சிங்கப்பூர் சென்றுள்ளார் விஜயகாந்த். சிங்கப்பூர் செல்லும் முன் விமான நிலையத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்தார் விஜயகாந்த். அப்போது, ஆர்.கே நகர் இடைத்தேர்தலில் யாருக்கும் ஆதரவு இல்லை என்றும், தமிழகத்தில் நிகழும் மாணவர்கள் தற்கொலைக்கு தமிழக அரசுக்கு தான் காரணம் என்றும் அவர்
தெரிவித்தார். மேலும், மாநிலத்தில் நடக்கும் இந்த தற்கொலைகள் எல்லாம் மாநில அரசின் அவலநிலையையே சுட்டிக்காட்டுகின்றது என்றும், இதை எல்லாம் கவனிக்காமல் ஆட்சியில் இருப்பவர்கள் தங்கள் வேலைகளை மட்டும் பார்த்துவருவதாக விஜயகாந்த் குற்றம் சாட்டினார்.
DMDK Leader Vijayakanth goes to Singapore
for Medical Treatment today. He said that TN Government acting irresponsibly in all Issues.