பள்ளி மாணவியை மிரட்டி 4 வருடங்கள் பலாத்காரம் செய்த நண்பர்கள்..வீடியோ

Oneindia Tamil 2017-11-28

Views 28

சென்னை வேப்பேரி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சவுகார்பேட்டை பகுதியை சேர்ந்த ஒருவர், தனது 17 வயது மகளை, சவுகார்பேட்டை கிருஷ்ணமுதலி தெருவை சேர்ந்த மோனி மற்றும் வியாசர்பாடி பாலகிருஷ்ணன் தெருவை சேர்ந்த ரவீந்திரன் ஷர்மா ஆகிய இரண்டு பேர் சேர்ந்து பாலியல் பலாத்காரம் செய்து, அதை வீடியோ எடுத்து ரூ.5 லட்சம் கேட்டு மிரட்டுவதாக புகார் அளித்தார்.

இதையடுத்து, இருவர் மீதும் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்துதல், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை சட்டம் ஆகிய பிரிவுகளின் கீழ் வேப்பேரி அனைத்து மகளிர் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். ரவீந்தர் சர்மாவை போலீசார் கைது செய்துள்ள நிலையில் மோனி தலைமறைவாகிவிட்டார்.

கடந்த 2013ம் ஆண்டு, செல்போன் கடையில் வேலை பார்த்த மோனிக்கு பேஸ்புக் 9ம் வகுப்பு மாணவி பழக்கம் கிடைத்துள்ளது. பிறகு இது காதலாகியுள்ளது. இதையடுத்து லாட்ஜூக்கு அழைத்து சென்று மோனி அந்த சிறுமியுடன் உல்லாசமாக இருந்துள்ளார். அதை வீடியோ எடுத்து அதை ரவீந்தரிடம் காட்டி மகிழ்ந்துள்ளார். இதை பார்த்த ரவீந்தரும் ஆசைப்பட்டு அந்த சிறுமியுடன் உல்லாசமாக இருக்க கேட்டுள்ளார்.
அதேபோல ஒரு நாள் லாட்ஜிக்கு காதலியை அழைத்து வந்து, ரவீந்தருடன் உல்லாசமாக இருக்க மோனி கூறியுள்ளார். அதற்கு மாணவி மறுப்பு தெரிவித்தபோது பேஸ்புக்கில் உல்லாச வீடியோவை போட்டுவிடுவேன் என மோனி மிரட்டியுள்ளார். இதையடுத்து ரவீந்தருடனும் அந்த மாணவி உல்லாசமாக இருந்துள்ளார். பிறகு மாணவியை ரவீந்தர் காதலிப்பதாக கூறியுள்ளார். இதையும் ஏற்றுக்கொண்ட மாணவி, மோனியுடனும், ரவீந்தருடனும் மாறி, மாறி ஒருவருக்கு தெரியாமல் மற்றொருவருடன் லாட்ஜில் உல்லாசமாக இருந்துள்ளார்.


Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS