அணிகள் இணைந்தாலும் மனங்கள் இணையவில்லை என்ற ஓபிஎஸ் அணியின் கூக்குரலுக்கு மதிப்பளித்து திண்டுக்கல்லில் நடைபெற்ற அதிமுக ஊழியர் கூட்டத்துக்கு முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் அழைக்கப்பட்டார். இக்கூட்டத்தில் பேசிய நத்தம் விஸ்வநாதன், ஓபிஎஸ் அணி என்பதற்காக எப்படியெல்லாம் ஒதுக்கப்பட்டோம் என புலம்பித் தள்ளிவிட்டார்.
அதிமுக அணிகள் இணைந்த பின்னரும் கீழ்மட்டத்தில் இணக்கம் இல்லை என மைத்ரேயன் பொங்கினார். அவருக்கு ஆதரவாக நத்தம் விஸ்வநாதனும் சவுண்டு விட்டுப் பார்த்தார். அமைச்சர்களுக்கு நாவடக்கம் தேவை என எச்சரிக்கையும் விடுத்தார். இந்த நிலையில் திண்டுக்கல்லில் அதிமுக ஊழியர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், எம்.எல்.ஏ. வி.பி.பி. பரமசிவம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
ஓபிஎஸ் அணி என்பதால் இதுவரை ஒதுக்கிவைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதனும் இந்த கூட்டத்துக்கு அழைக்கப்பட்டிருந்தார். ஊழியர் கூட்டம் என பெயரிடப்பட்டாலும் ஓபிஎஸ்- ஈபிஎஸ் அணியின் இணக்க கூட்டமாகத்தான் இது நடைபெற்றது
Former minister Natham Viswanathan told that the merging of the AIADMK two factions may have eased tensions at the higher level only but the cadres level still function in two groups as far as Dindigul.