டிவி சீரியலில் நடிக்க வாய்ப்பு வாங்கித்தருவதாக கூறி பெண்களை ஏமாற்றி விபச்சாரத்தில் தள்ளும் கும்பலை போலீசார் கைது செய்துள்ளனர். சென்னையில் சொகுசு காரில் பாலியல் தொழிலில் ஈடுபட்ட புரோக்கரை கைது செய்த போலீசார், காரில் இருந்த பெண்ணை மீட்டுள்ளனர். சென்னைக்கு வேலை தேடி வரும் பெண்களை ரயில் நிலையத்திலேயே புரோக்கர் கும்பல் மடக்கிவிடுகிறது.
சினிமா மற்றும் தொலைக்காட்சி தொடர்களில் நடிக்க வாய்ப்பு வாங்கித் தருவதாகவும், தனியார் நிறுவனங்களில் நல்ல சம்பளத்தில் வேலை வாங்கித் தருவதாகவும், ஆசை வார்த்தைகள் கூறி ஏமாற்றி விபசார தொழிலில் தள்ளி விடுகின்றனர்.
புரோக்கர் கும்பலின் மிரட்டலுக்கு பணியும் பெண்களை அடுக்குமாடி குடியிருப்புகள், பங்களா வீடுகள் மற்றும் தனியார் விடுதிகளுக்கு அழைத்துச் சென்று தங்க வைத்து அவர்களை கட்டாயப்படுத்தி பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி பணம் சம்பாதிப்பதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்து வருகிறது.
இந்த குற்றவாளிகளை கைது செய்ய பாலியல் தொழில் தடுப்புப் பிரிவு ஆய்வாளர் தலைமையிலான போலீஸார், ரகசியமாக கண்காணித்து பாலியல் தொழில் தரகர்களை கைது செய்து வருகின்றனர். நேற்று வளசரவாக்கம், பகுதியில் கண்காணிப்பு பணியிலிருந்தபோது, மெகாமார்ட் அருகே சொகுசு காரில் பாலியல் தொழிலில் ஈடுபட்ட பெண்களை காவல்துறையினர் கைது செய்தனர்.
A woman was rescued by the police from the clutches of brothel broker woman in Chennai.