ஆட்சியும் இல்லை, கட்சியும் இல்லை..விரக்தியில் தினகரன் கூடாரம்- வீடியோ

Oneindia Tamil 2017-11-25

Views 1

ஆட்சியும் இல்லை, கட்சியும் இல்லை என்ற நிலை ஏற்பட்டுள்ளதால் டிடிவி தினகரன் கூடாரம் காலியாகி வருகிறது. இதனால் பல மாஜி எம்எல்ஏக்கள், மற்றும் எம்.பிக்கள், அதிமுக பக்கம் செல்ல முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. எதை சொன்னாலும் செய்ய தயாராக இருந்தார் ஓ.பி.எஸ். ஆனால் முதல்வர் பதவி மீது கொண்ட பெரு மோகத்தால், அதை அடைய சசிகலா குறி வைக்க ஆரம்பித்தது வம்பு. ஓபிஎஸ் தர்மயுத்தம் என்ற பெயரில் திடீரென பிரிந்து செல்ல, சசிகலா சிறைக்கு செல்ல நிலைமை தலைகீழானது. ஆர்.கே.நகரில் வெற்றி பெற்று முதல்வராகிவிடலாம் என தினகரன் காய் நகர்த்த, எடப்பாடி பழனிச்சாமி, தினகரனுடன் மோதிக்கொள்ள, இப்படியாக அங்கு இரு கோஷ்டி உருவானது.

சசிகலா முதல்வர் ஆசையால், ஓபிஎஸ் அணியினர் என்று ஒன்று பிறந்தது. தினகரனின் முதல்வர் ஆசையால் எடப்பாடி அணி என்று ஒன்று பிறந்தது. பாதிக்கப்பட்ட எடப்பாடி-ஓபிஎஸ் அணிகள் ஒன்றாக இணைந்ததால் இப்போது சசிகலா-தினகரன் அணி பாடு தகிடுதத்தோம் ஆகிவிட்டது.

TTV faction ex MLAs and MPs try to jump to Edappadi faction as he has the governent and AIADMK party.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS