இறந்தவரின் உடலை சுடுகாட்டில் புதைக்காமல் வீட்டு வாசலின் முன் புதைத்ததால் பரபரப்பு...
திருச்சி மாவட்டம் சிகம்பட்டியை சேர்ந்தவர் சுப்பிரமணி. இவரது வீட்டில் இருந்து 500 மீட்டர் இடைவெளியில் இறந்தவர்களை புதைக்கும் சுடுகாடு உள்ளது. சுப்பிரமணி தனது மனைவி குழந்தைகளுடன் வெளியூர் சென்ற போது அப்பகுதியில் இறந்தவரின் உடலை வீட்டு வாசலின் முன் புதைத்து சென்றுள்ளனர். இது குறித்து போலீசிலும், வட்டாட்சியாளரிடமும் சுப்பிரமணி புகார் கொடுத்துள்ளார். இந்நிலையில் அதே ஊரை சேர்ந்த சரசு என்பவர் நேற்று இறந்துள்ளார். அவரது உடலை மீண்டும் சுப்பிரமணி வீட்டிற்கு முன் புதைக்க பள்ளம் தோண்டப்பட்டுள்ளது. இது குறித்து சுப்பிரமணி போலீசாரிடம் புகார் அளிக்க சென்ற வேலையில் சரசுவின் உடலை அவரது உறவினர்கள் புதைத்து விட்டு சென்றுள்ளனர். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.