சாதிக் அலி தீர்ப்பை தேர்தல் ஆணையம் மேற்கோள் காட்டியது ஏன்?- வீடியோ

Oneindia Tamil 2017-11-23

Views 5

சாதிக் அலி தீர்ப்பு அடிப்படையில் இரட்டை இலை சின்னம் மதுசூதனன் அணிக்கு வழங்கப்பட்டுள்ளதாக இந்திய தேரதல் ஆணையம் அறிவித்துள்ளது.
1969ம் ஆண்டு காங்கிரஸ் கட்சி உடைந்த போது உச்சநீதிமன்ற நீதிபதி சாதிக் அலி அளித்த தீர்ப்புதான் இப்போது தேர்தல் ஆணையத்தால் மேற்கோள்காட்டப்பட்டுள்ளது.
பெரும்பாலான வழக்குகளில் இந்த தீர்ப்பு மேற்கோள் காட்டப்படுகிறது. அப்படி அந்த தீர்ப்பில் என்ன கூறப்பட்டது, எந்த அடிப்படையில் அந்த தீர்ப்பு அமைத்தது என்பதை பார்க்கலாம்.1969ல் காங்கிரஸ் கட்சியில் இரண்டு அணிகள் உருவாகி, சின்னத்துக்காக தேர்தல் கமிஷனிடம் முறையிட்டன. அப்போது காங்கிரஸ் கட்சியின் சின்னமாக 'இரட்டைக் காளைமாடு' இருந்தது. இந்திரா காந்தியும், ஜெகஜீவன் ராமும் எதிரெதிரே கோஷ்டியாக பிரிந்து சின்னத்தை கேட்டனர்.

மக்கள் பிரதிநிதிகளின் ஆதரவு அதிகமாக இருந்ததால் ஜெகஜீவன் ராமுக்கு தேர்தல் ஆணையம் சார்பில் சின்னம் கொடுக்கப்பட்டது. இதனால், அடுத்து வந்த தேர்தலில், 'பசுவும் கன்றும்' சின்னத்தில் இந்திராகாந்தி தரப்பு போட்டியிட்டது. ஆனால் அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றது


English summary Sasikala's camp had argued that the present case of the AIADMK greatly differs from the Sadiq Ali case decided by the Supreme Court, which was cited by the rival faction as the benchmark.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS