அதிமுக சின்னமான இரட்டை இலையை முதல்வர் அணிக்கு வழங்கியுள்ளது தலைமை தேர்தல் ஆணையம். இதனால் அதிமுகவின் குடுமி இப்போது ஓ.பன்னீர்செல்வம் பக்கம் வந்துள்ளது. முதல்வர் பதவியை விட்டுத்தர சொன்ன, சசிகலாவுக்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம் 'தர்மயுத்தம்' என்ற பெயரில் கிளர்ச்சி அறிவித்தார். மொத்தம் 11 எம்எல்ஏக்கள் இணைந்து சசிகலா கோஷ்டியை எதிர்த்தனர். இப்படி பன்னீர்செல்வம் கோஷ்டி தனியாக சென்றபோது, எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்ட அமைச்சர்கள் அனைவரும் சசிகலா ஆதரவாளர்களாக இருந்தனர்.
இரட்டை இலை சின்னத்தை முடக்க வேண்டும் என்று பன்னீர்செல்வம் ஆதரவாளரும், அதிமுக அவைத் தலைவராக இருந்த மதுசூதனன் தேர்தல் ஆணையத்தை அணுகினார். இதையடுத்து ஆர்.கே.நகர் இடைத் தேர்தலுக்கு முன்பாக இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டது. அதிமுக அம்மா அணி, அதிமுக புரட்சி தலைவி அம்மா அணி என இரு பெயர்களில் கட்சி இயங்கும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது.
Now O.Pannerselvam faction gets more power as EC allot two leaves symbol to them.