திடீர் டிவிட்டர் அரசியல்வாதிகள் எங்கே? என்று நடிகர் கமலுக்கு பாஜக தலைவர் தமிழிசை கேள்வி எழுப்பியுள்ளார். தன் துறையில் பெரும் துயரம் நிகழ்ந்தும் கமல் அமைதி என மறைமுகமாக தமிழிசை விமர்சனம் செய்துள்ளார். தயாரிப்பாளர் அசோக்குமார் தற்கொலை தொடர்பாக தமிழிசை கமல்ஹாசனுக்கு சில கேள்விகளை முன் வைத்துள்ளார். அவர் இதுவரை அந்த சம்பவம் குறித்து கருத்தோ, கண்டனமோ தெரிவிக்கவில்லை என்பதால் இதுபோன்ற டிவிட்டை தமிழிசை வெளியிட்டுள்ளார். தன்துறைசார்ந்த துக்கம் தன்னை ஏற்றிவிட்ட துறையில் பெரும் துயரம் பகிர்ந்து கொள்ளா கொடூர அமைதி. திடீர் டுவிட்டர் அரசியல்வாதிகள் எங்கே? தேடத்தான்வேண்டும்! நாமும் துணைநிற்போம் கந்தைவட்டிக்கொடுமைகள் ஒழியவேண்டி ஓங்கி குரல் கொடுப்போம் மனிதநேயத்துடன் செயலாற்றி இன்னுயிர் காப்போம். இவ்வாறு டிவிட்டரில் கூறியுள்ளார் தமிழிசை. மேலும் இவர் கமலைத்தான் இப்படி குறிப்பிடுகிறார் என்று ஒரு பத்திரிகையாளர் டிவிட் செய்ய, அதை தமிழிசை ரீடிவிட் செய்துள்ளார்.
Tamilnadu BJP chief Tamilisai asking where is actor Kamal Haasan while financier Ashok Kumar committed suicide.