கொழும்பில் நடந்த ஒரு உள்ளூர் போட்டியில் இலங்கை வீரர் ஒருவர் வித்தியாசமான ஷாட் ஒன்றை அடிக்க முயற்சித்து இருக்கிறார். அந்த ஷாட் அடிக்க முயன்ற 'சமாரா சில்வா' இதன் மூலம் ஒரே நாளில் வைரல் ஆகி இருக்கிறார். இவர் பந்தை சாதாரணமாக அடிக்காமல் ஸ்டம்ப்புக்கு பின்பக்கம் போய் நின்று வித்தியாசமாக அடிக்க முயன்று இருக்கிறார். அவரின் இந்த முயற்சி கிரிக்கெட் உலகில் மிகவும் வித்தியாசமான ஷாட் என்று கூறப்படுகிறது. சமாரா சில்வா இதற்கு முன்பே பல முறை வைரல் ஆன வீரர் என்பது குறிப்பிடத்தக்கது. பல்வேறு விஷயங்கள் காரணமாக இவர் கிரிக்கெட் உலகில் எப்போதும் பேசு பொருளாக இருந்து வருகிறார்.
கொழும்பில் நடந்த ஒரு உள்ளூர் போட்டியில் இலங்கையை சேர்ந்த சமாரா சில்வா என்ற வீரர் மிகவும் வித்தியாசமா ஷாட் ஒன்றை அடிக்க முயன்றார். ஸ்டம்ப்புக்கு பின்னே சென்ன்று இவர் சிக்ஸ் அடிக்க முயன்றார். ஆனால் பவுலர் லாவகமாக பந்தை சரியாக ஸ்டம்ப்பை நோக்கி வீசி அவரை அவுட் செய்தார். தற்போது இது வீடியோவாக வெளியாகி வைரல் ஆகியுள்ளது.
Bizarre batting of Sri Lanka player got viral in social media. Player called Chamara Silva tried to hit the ball by standing behind the stumps.