நனவாகிறது பல வருட கனவு.. இந்திய அணியில் இணையும் சஞ்சு.. டோணிக்கு மாற்றா?- வீடியோ

Oneindia Tamil 2017-11-22

Views 9.6K

இந்திய கிரிக்கெட் அணியில் கேரளாவை சேர்ந்த சஞ்சு சாம்சன் இணைய இருப்பதாக கூறப்படுகிறது. இவர் இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரில் கலந்து கொள்ள வாய்ப்பு இருக்கிறது. அதிரடி பேட்ஸ்மேனாக மட்டுமல்லாமல் இவர் ஒரு விக்கெட் கீப்பர் என்பதால் டோணிக்கு பதிலாக அணியில் சேர்க்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் சில தினங்களில் வெளியாகும். ஐபிஎல் போட்டிகளிலும், ரஞ்சி போட்டியிலும் மிகவும் சிறப்பாக விளையாடி இருக்கும் சஞ்சு சாம்சன் ஏற்கனவே பலமுறை அணியில் இணைவார் என்று கூறப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.

இந்திய அணியில் தற்போது பெரிய அளவில் பங்களிப்பை தராத ஒரே மாநிலம் கேரளாவாகத்தான் இருக்கிறது. ஒருகாலத்தில் வேகப்பந்தில் வித்தியாசம் காட்டிய கேரளாவை சேர்ந்த ஸ்ரீசாந்த் சூதாட்ட புகார் காரணமாக கிரிக்கெட் விளையாடுவதில் இருந்து தடைபெற்றார். அதன்பின் அந்த மாநிலத்தில் இருந்து இந்திய அணிக்கு ஒரு பிளேயர் கூட தேர்ந்தெடுக்கப்படவில்லை. இந்த நிலையில் திருவனந்தபுரத்தை சேர்ந்த சஞ்சு சாம்சனை மொத்த கேரளாவே செல்லப்பிள்ளையாக வைத்து கொண்டாட தொடங்கியது.

இந்த நிலையில் தற்போது சஞ்சு சாம்சன் இலங்கைக்கு எதிராக நடக்க இருக்கும் ஒருநாள் தொடரில் அவர் விளையாட வாய்ப்பு இருக்கிறது. இதற்கு முன்பே அவர் இங்கிலாந்துக்கு எதிராக 2014ல் நடத்த ஒருநாள் போட்டியில் அணியில் சேர்க்கப்பட்டார். ஆனால் அப்போது அவர் பிளெயிங் லெவனில் இடம்பெறவில்லை. அதன்பின் முதன்முறையாக 2015ல் ஜிம்பாப்பே அணிக்கு எதிரான டி-20 போட்டியில் விளையாடினார். அதுதான் அவரது கடைசி ஐசிசி போட்டியாகும்.

Kerala wicketkeeper-batsman Sanju Samson will be coming back to Team India after a long struggle. He will play in limited over series against Sri Lanka.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS