அப்பல்லோ மருத்துவமனையில் கடந்த ஆண்டு சிகிச்சை பெற்ற ஜெயலலிதா, இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர்களை வெற்றி பெற வைத்த வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்து கடைசியாக கடிதம் எழுதிய நாள் இன்று. அதன்பின்னர் அவரது கையெழுத்தை மக்கள் காண முடியாமலேயே போய் விட்டது. மரணமடைந்த ஜெயலலிதாவைத்தான் மக்கள் கண்டனர். கடந்த ஆண்டு செப்டம்பர் 22 ஆம் அப்பல்லோவில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அரவக்குறிச்சி, தஞ்சை, திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலின் போது அதிமுக வேட்பாளர் தாக்கல் செய்த வேட்புமனுக்களுடன் ஜெயலலிதா பெருவிரல் ரேகை வைத்த படிவங்கள் கொடுக்கப்பட்டன.
இது பெரும் சர்ச்சையை கிளப்பியிருந்தது. அந்த அளவுக்கா ஜெயலலிதாவின் உடல்நிலை மோசமடைந்துள்ளது என கேள்வி எழுப்பப்பட்டது. முதல்வர் ஜெயலலிதாவுக்கு எழுதுவதற்கு பயிற்சி அளிக்கப்படுவதாகவும் செய்திகள் வெளியாகின. நவம்பர் 13ஆம் தேதி திடீரென ஜெயலலிதா பெயரில் ஒரு அறிக்கை வெளியானது.
Late Jayalalitha's final signature was released on this day last year and this was her last statement too