காந்தியை சுட்டவருக்கு சிலை.. பூஜை செய்யும் இந்து மகாசபா..வீடியோ

Oneindia Tamil 2017-11-21

Views 1

மத்திய பிரதேசத்தின் முக்கியமான நகரான 'குவாலியர்' என்ற பகுதியில் உள்ள இந்து மகாசபா அலுவலகத்தில் சில நாட்களுக்கு முன் நாதுராம் கோட்ஸேவுக்கு சிலை வைக்கப்பட்டது. காந்தியை கொன்றவருக்கு சிலையா என்று இதற்கு எதிராக பலரும் குரல் கொடுத்து இருந்தனர். காங்கிரஸ் இந்த சில விவாகரத்தில் தலையிட்டது. இது குறித்து மூன்று முறை அந்த மாவட்ட நிர்வாகத்திடம் புகார் அளித்து இருந்தது. தற்போது குவாலியர் மாவட்ட நிர்வாகம் அந்த சிலையை 24 மணி நேரத்திற்குள் அகற்றக் கோரி உத்தரவு பிறப்பித்து இருக்கிறது. இந்த நிலையில் இந்து மகாசபா இந்த விஷயத்தில் புதிய 'பல்டி' ஒன்றை அடித்து இருக்கிறது.

மத்திய பிரதேசத்தின் உள்ள 'குவாலியர்' என்ற மாவட்டத்தில் நாதுராம் கோட்ஸேவுக்கு கோவில் கட்ட இந்து மகாசபா முடிவு செய்து இருந்தது. இதற்காக அனுமதி கிடைக்காத காரணத்தால் பொது இடத்தில் சிலை வைக்க இந்து மகாசபா முடிவு எடுத்தது. ஆனால் அதற்கும் அனுமதி கிடைக்காத காரணத்தால் இந்து மகாசபா தனது அலுவலகத்திலேயே சில நாட்களுக்கு முன் நாதுராம் கோட்ஸேவுக்கு சிலை வைத்தது.

இந்த நிலையில் அந்த சிலைக்கு தினமும் சம்ஸ்கிருத மந்திரம் சொல்லி பூஜை செய்து வந்துள்ளனர். அதுமட்டும் இல்லாமல் வார வாரம் 'அகண்ட பாரத மந்திரம்' என்ற புதிய மந்திரம் ஒன்றை உருவாக்கி சிறப்பு பூஜை செய்து இருக்கிறார்கள். கோட்ஸே காந்தியை கொல்வதற்கு குவாலியர் நகரில் இருந்துதான் சென்றார் என்பதற்காகவே இந்த பகுதியில் சிலை வைத்து இருந்ததாக அவர்கள் கூறியிருந்தார்கள்.


Congress has issued an ultimatum to the Hindu Mahasabha to remove the statue from its office within 24 hours. The Bharatiya Hindu Mahasabha has denied that any temple dedicated to Nathuram Godse has been built in the complex of its office.

Share This Video


Download

  
Report form