டெல்லியில் பிரதமர் மோடியிடம் தமிழகத்துக்கு கூடுதல் நிலக்கரி கேட்டு பிரதமர் மோடியிடம் துணை முதல்வர் ஓபிஎஸ் மனு எதுவுமே கொடுக்கவில்லை என பிரதமர் அலுவலகம் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் தெரிவித்திருப்பது பரபரப்பை கிளப்பியுள்ளது. அதிமுகவின் இரு அணிகளும் இணைந்த நிலையில் ஓபிஎஸ் துணை முதல்வரானார். இருப்பினுன் அமைச்சர்களோடு அமைச்சர்களாகவே நிகழ்ச்சிகளில் ஓபிஎஸ் அமர வைக்கப்பட்டார்.
அத்துடன் துறை சார்ந்த எந்த ஒரு முடிவையும் தன்னிச்சையாக அவரால் எடுக்கவும் முடியவில்லை. இது தொடர்பாக பிரதமர் மோடியை சந்தித்து முறையிட டெல்லி போய் காத்திருந்து ஏமாந்து திரும்பினார்.
பின்னர் திடீரென பிரதமர் மோடியின் அப்பாயின்ட்மெண்ட் கிடைத்தது. இதனால் பிரதமர் மோடியை சந்தித்து தாம் ஒதுக்கப்படுவது குறித்து முறையிட்டிருந்தார்.
According to the RTI Information that TamilNadu Deputy CM O Panneerselvam meeting with PM Modi at Delhi for not the excess coal to the state