இந்திய அணியில் திருநெல்வேலிகாரர்... இலங்கை டெஸ்ட் போட்டியில் விளையாடுவார்- வீடியோ

Oneindia Tamil 2017-11-21

Views 16.2K

இந்திய டெஸ்ட் அணியில் புதிதாக தமிழக வீரர் ஒருவர் சேர்க்கப்பட்டு இருக்கிறார். விஜய் ஷங்கர் என்ற அவர் திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்தவர் ஆவார். இவர் இலங்கைக்கு எதிராக நடக்கும் இரண்டாவது மற்றும் முன்றாவது டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவதற்காக இந்திய அணியில் சேர்க்கப்பட்டு இருக்கிறார். பல எதிர்கால திட்டங்களை மனதில் வைத்து இவர் இந்திய அணியில் சேர்க்கப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. இவர் இந்திய அணியில் இணைவதற்கு முன்பே பல சாதனைகளை நிகழ்த்தி இருக்கிறார். ஏற்கனவே இந்திய சர்வதேச அணியில் தினேஷ் கார்த்திக், அஸ்வின், முரளி விஜய் என்று மூன்று தமிழக பிளேயர்கள் இருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்திய கிரிக்கெட் வீரர் புவனேஷ்குமார் தனது காதலியை நவம்பர் 23ம் தேதி திருமணம் செய்கிறார். இந்த திருமணம் டெல்லியில் மிகவும் கோலாகலமாக நடக்க இருக்கிறது. இதனால் அவர் 24ம் தேதி இலங்கைக்கு எதிராக நடக்க இருக்கும் போட்டியில் இருந்து விலகி இருக்கிறார். அதேபோல் மூன்றாவது டெஸ்ட் போட்டியிலும் அவர் விளையாட மாட்டார் என கூறப்படுகிறது. இந்த நிலையில் இந்திய அணியில் இருந்த தவானும் விலகி இருக்கிறார். அவர் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் மட்டும் விளையாட மாட்டார்.

A Tamilnadu player named Vijay Shankar got selected in Indian test squad against Sri lankan series. He has played for Chennai Super Kings, Sun Risers Hyderabad and Indian A team.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS