இம்மாதமே தமிழக அரசு கலைப்பு..நமது எம்ஜிஆர் பரபரப்பு செய்தி- வீடியோ

Oneindia Tamil 2017-11-21

Views 2

தமிழக அரசு வரும் 25 அல்லது 26ம் தேதி டிஸ்மிஸ் செய்யப்பட்டு ஆளுநர் ஆட்சி அமல்படுத்தப்பட உள்ளதாக 'அதிமுக அம்மா' கட்சி நாளிதழான நமது எம்ஜிஆர் செய்தி வெளியிட்டுள்ளது.
இதுதொடர்பாக ஒரு பெட்டி செய்தியை அந்த நாளிதழ் வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ள விஷயங்கள் பரபரப்பு ரகம்.
நமது எம்ஜிஆர் நாளிதழில் கூறப்பட்டுள்ள அந்த பெட்டி செய்தி வாசகங்கள் வரிக்கு வரி அப்படியே இதோ

எடப்பாடி அரசு வருகிற 25 அல்லது 26ம் தேதி டிஸ்மிஸ் செய்யப்பட்டு, ஆளுநர் ஆட்சி அமலுக்கு வர இருப்பதாக தெரிகிறது. ஈ.பி.எஸ், ஓ.பி.எஸ் உட்பட 23 அமைச்சர்கள் மீதும் ஊழல் வழக்கு பதிவு செய்து கைது செய்யப்பட வாய்ப்பு உள்ளதாகவும் தகவல்கள் கசிகிறது.
அமைச்சர்களின் பினாமி சொத்துக்கள் உள்ளிட்ட அனைத்து விவரங்களும் ஆளுநர் வசம் உள்ளது. இதேபோல 1976ம் ஆண்டு ஜனவரி 31ம் தேதி தி.மு.க ஆட்சியை இரவோடு இரவாக கலைப்பதற்கு அன்றைய பிரதமர் இந்திராகாந்தி நடவடிக்கை எடுத்தார்.

Tamil Nadu Government will be dissolved by the Governor in this month end, says Namathu MGR news paper.

Share This Video


Download

  
Report form