தன்னிடம் நின்று செல்ஃபி எடுத்த இளைஞனை கர்நாடக அமைச்சர் அடித்து தள்ளியது வீடியோவில் பதிவாகி வைரலாகியுள்ளது. கர்நாடக காங்கிரஸ் அரசில், மின்துறை அமைச்சராக பதவி வகிப்பவர் டி.கே.சிவகுமார். கிரானைட், ரியல் எஸ்டேட் தொழிலதிபரான இவர், அடாவடிகளுக்கு பெயர் போனவர். நேற்று பெல்காமில் நடைபெற்ற 'குழந்தைகள் உரிமை' நிகழ்ச்சியில் அமைச்சர் சிவகுமார், பங்கேற்றபோது, மனித உரிமைகளை மீறி செயல்பட்டார் என்பதுதான் இதில் கவனிக்ககத்தக்கது.
நிகழ்ச்சிக்கு பிறகு வெளியே நிருபர்களிடம் பேசுவதற்காக சிவகுமார் நின்றிருந்தார். அப்போது, அவரது பின்னால் ஒரு கல்லூரி மாணவன் தனது செல்போனை எடுத்து செல்ஃபி எடுக்க முற்பட்டார். அமைச்சருடன் தான் நிற்பதை போல படம் வர வேண்டும் என அவர் முயன்றார்.
அப்போது எரிச்சலுற்ற சிவகுமார், திடீரென திரும்பி சட்டென அந்த மாணவன் கையை ஓங்கி அடித்துவிட்டார். இதனால் மாணவன் கையில் இருந்த போன் கீழே விழுந்து நொறுங்கியது. போனை எடுக்க மாணவன் ஓடிய நிலையில், எதுவுமே நடக்காததை போல பிரஸ் மீட்டை ஆரம்பித்தார் அமைச்சர்.
Karnataka Minister DK Shivkumar hits a man who was taking a selfie during a child rights event at a college in Belgaum.