மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து விசாரிக்க ஆணையத்திற்கு தற்போதுள்ள அதிகாரம் போதாது என்று அரசுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. எனவே கூடுதல் அதிகாரம் வழங்குமாறும் அரசிடம் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. கடந்த டிசம்பர் மாதம் 5ம் தேதி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஜெயலலிதா மரணமடைந்ததாக அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து அவரது மரணத்தில் சந்தேகம் இருக்கிறது என்று பிரச்னையை முதலில் எழுப்பியவர் ஓ.பன்னீர்செல்வம்.
அதிலும் சிபிஐ விசாரித்தால் தான் உண்மை வெளிவரும் என்றும் எதிர் அணியாக செயல்பட்ட போது வலியுறுத்தினர். இதே போன்று பல்வேறு அரசியல் கட்சிகளும் சந்தேகங்களை கிளப்பவே, சசிகலா குடும்பத்திற்கு செக் வைக்கும் விதமாக முதல்வர் பழனிசாமி ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை கமிஷனை அமைத்தார். 3 மாதத்தில் விசாரணை நடத்தி முடிக்க அரசு உத்தரவிட்ட நிலையில் விசாரணை தொடங்காத நிலையிலேயே 2 மாதங்கள் ஓடிவிட்டன.