இன்டிகோ விமான நிறுவன பெண் ஊழியர் காலில் விழுந்து கதறிய ஆண்!- வீடியோ

Oneindia Tamil 2017-11-21

Views 24.6K

இன்டிகோ விமான நிறுவன பெண் ஊழியர் காலில் ஆண் ஒருவரை விழுந்து மன்னிப்பு கேட்க வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இன்டிகோ விமான நிறுவனம் அவ்வப்போது சர்ச்சைகளில் சிக்கியுள்ளது. சமீபத்தில் பயணி ஒருவரை அடித்து இழுத்துச் சென்றதாக வெளியான வீடியோ பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து இன்டிகோ விமான நிறுவனம் மன்னிப்பு கேட்டது, மேலும், அந்த ஊழியர் மீது நடவடிக்கை எடுத்தது.

ஆனால் இன்டிகோ தொடர்பான சர்ச்சைகள் முடிவில்லாமல் போய்க்கொண்டுள்ளளது. குவகாத்தியில் பெண் பயணியின் செல்போனை இன்டிகோ ஊழியர் பறித்துவிட்டதாக ஒரு சர்ச்சை சமீபத்தில் எழுந்தது. புகாரையடுத்து அந்த ஊழியர் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் இப்போது ஹைதராபாத் விமான நிலையத்தில் எடுக்கப்பட்டதாக கூறி ஒரு வீடியோ வைரலாகிறது. அதில் இன்டிகோ விமான நிறுவன பெண் ஊழியர் தனது காலில் ஒரு ஆணை விழுந்து மன்னிப்பு கேட்க கட்டளையிடும் காட்சி உள்ளது.

தெலுங்கில் அந்த பெண் பேசுகிறார். "எனது காலை தொடரு. குனி, குனி, குனி எனது காலை தொடு" என்று அந்த பெண் சத்தமாக கூறும் காட்சி அதில் இடம் பெற்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


A man is ordered by an IndiGo airlines employee to touch her feet for allegedly misbehaving with her at the Hyderabad airport in a video that has gone viral. The man was drunk, the airline has alleged.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS