என் பேச்சு உங்களுக்குப் புரிகிறதா நல்லவர்களான மக்களுக்கு என்னுடைய பேச்சு புரியும் என்று சென்னையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது தேமுதிக தலைவர் விஜயகாந்த் பேசியுள்ளார்.
நியாய விலைக்கடையில் சர்ச்சரை விலை உயர்வைக் கண்டித்து சென்னை வள்ளுவர் கோட்டத்தில் தேமுதிக சார்பில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தின் போது தேமுதிக தலைவர் விஜயகாந்த் பேசியதாவது : என்னுடைய பேச்சு உங்களுக்குப் புரிகிறதா, நல்லவர்களாகிய மக்களுக்கு என்னுடைய பேச்சு புரியும். முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்குத் தான் புரியாது.என் பேச்சு உங்களுக்குப் புரிகிறதா நல்லவர்களான மக்களுக்கு என்னுடைய பேச்சு புரியும் என்று சென்னையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது தேமுதிக தலைவர் விஜயகாந்த் பேசியுள்ளார்.
நியாய விலைக்கடையில் சர்ச்சரை விலை உயர்வைக் கண்டித்து சென்னை வள்ளுவர் கோட்டத்தில் தேமுதிக சார்பில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தின் போது தேமுதிக தலைவர் விஜயகாந்த் பேசியதாவது : என்னுடைய பேச்சு உங்களுக்குப் புரிகிறதா, நல்லவர்களாகிய மக்களுக்கு என்னுடைய பேச்சு புரியும். முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்குத் தான் புரியாது.மக்களுக்கு ஸ்லோபாய்சன் போல விலைஏற்றத்தை கொடுங்கள், அதை விட்டு ஒரேயடியாக ரூ. 12ஐ ஏற்றியுள்ளனர். இதன் பெயர் தான் நியாயவிலைக்கடையா, மக்கள் ரேஷனுக்குப் போகக்கூடாது பருப்பு, சர்க்கரை வாங்கக் கூடாது என்பது தான் அரசின் திட்டம். ஜிஎஸ்டி நல்லது தான், ஆனால் போடவேண்டிய அளவு தான் போட வேண்டும். மாணவர்கள், இளைஞர்கள் வேலைவாய்ப்பு இல்லாமல் தவித்து வருகின்றனர் என்று விஜயகாந்த் பேசினார்.
DMDK chief Vijayakanth asks the cadres who gathered for protest against sugar rate increase at ration shops and asking in that gathering whether people understand his speech.